மாதவனின் ராக்கெட்ரி பட OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | July 20, 2022 13:28 PM IST
இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக பல மொழிகளில் நடித்து சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் மாதவன் தற்போது இயக்குனராகவும் சாதித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக மாதவன் இயக்கி ராக்கெட்ரி திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
உலகின் பல மொழிகளில் வெளியான ராக்கெட்ரி திரைப்படத்தை பலரும் வெகுவாக பாராட்டினர். குறிப்பாக சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ராக்கெட்ரி திரைப்படத்தை கண்டு ரசித்த சர்வதேச சினிமா பிரபலங்கள், மாதவன் மற்றும் ராக்கெட்ரி படக்குழுவினரை எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ராக்கெட்ரி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, வருகிற ஜூலை 26ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
hop on for a space adventure 🚀#RocketryOnPrime, July 26 pic.twitter.com/W3JDZEz2eD
— amazon prime video IN (@PrimeVideoIN) July 20, 2022