தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகனாகவும் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா நல்ல தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புகளை தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறனுடன் இணையும் சூர்யா, வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு(2021) வெளியான சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கியிருந்தார். மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படம சர்வதேச விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

குறிப்பாக ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரை பட்டியலுக்கான போட்டியிலும் ஜெய் பீம் திரைப்படம் இடம்பிடித்தது. இதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா ஆஸ்கார் விருது அகாடமியின் தேர்வுக் குழுவில் புதிய உறுப்பினராக இணைய அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் கர்நாடக முதல்வர் H.D.குமாரசாமி அவர்கள் கோவிட் தொற்று காரணமாக ஓய்வில் இருந்த ஒருவார சமயத்தில் ஜெய்பீம் மற்றும் ஜண கண மண ஆகிய இரண்டு திரைப்படங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள் குறித்து ஷெய்பீம் திரைப்படம் மிகுந்த அழுத்தமாக பேசியது இதயத்தை தொட்டதாகவும் புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெய்பீம் மற்றும் ஜனகணமன படங்கள் குறித்து முன்னாள் கர்நாடக முதல்வர் H.D.குமாரசாமி அவர்களின் அந்த நீண்ட பதிவு இதோ…

 

I spent time reading & watching movies while being treated for Covid at home for the last one week. I watched 2 films Jai Bhim & Jana Gana Mana. Both films with their sensitive story plot touched my heart & also felt agitated. 1/10#JaiBhim #JanaGanaMana pic.twitter.com/9AR5xMyp4e

— H D Kumaraswamy (@hd_kumaraswamy) July 18, 2022