பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டானா கமர்ஷியல் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் திகழும் பிரபுதேவா தனக்கே உரித்தான ஸ்டைலில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களாக தயாராகும் ரேக்ளா மற்றும் முஸாசிர் ஆகிய படங்களில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா & ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் ஃபிளாஷ்பேக், இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களும் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபு தேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், இயக்குனர் N.ராகவன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது.

அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள மை டியர் பூதம் படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து ரம்யா நம்பீசன் மற்றும் மாஸ்டர் அஸ்வந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மை டியர் பூதம் படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மை டியர் பூதம் திரைப்படத்தின் புதிய Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. கலகலப்பான அந்த Sneak Peek வீடியோ இதோ…