தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.மாநாடு படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பின் வெந்து தணிந்தது காடு,பத்துதல உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள மாநாடு படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன்,எஸ்.ஜே.சூர்யா,பாரதிராஜா.எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் பல போராட்டங்களை கடந்து வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை இந்த படம் பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கலாட்டாவிற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்,அதில் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளனர் என்ற தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.ரிலீசுக்கு முந்தைய நாள் இருந்த சிக்கல்கள் போன்ற பல சுவாரசிய விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்,அதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்