சிலம்பரசன் TR நடிப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு.வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.டைம் லூப் முறையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் இந்த படத்தினை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.பல பிரபலங்களும் இந்த படத்திற்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தினை பார்த்து ரசித்து விட்டு முக்கிய படக்குழுவினரான நாயகன் சிம்பு,இயக்குனர் வெங்கட் பிரபு,தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோருக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவின் ஜாம்பவானிடம் வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சியில் உள்ளது மாநாடு படக்குழு.