அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தான் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்து உள்ள அரசு உதவி பெறும் உயர் நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்தப் பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக 30 வயதான நாட்ராயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஏற்கெனவே திருமணமான நிலையில், இங்கு பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில் தான், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இவர், ஆங்கில பாடம் நடத்தி வந்தார்.

அப்போது, அந்த 10 வகுப்பு மாணவிகளில் குறிப்பிட்ட ஒரு மாணவியிடம் மட்டும் அடிக்கடி தனியாக அழைத்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த பள்ளி மாணவியிடம் “திருமணம் செய்துகொள்வதாகவும்” அந்த ஆசிரியர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, கடந்த ஓராண்டாக அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக அந்த ஆசிரியர் தொடர்ச்சியாகப் பேசி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, மாணவியிடம் தொடர்ந்து பேசி வந்த அந்த ஆசிரியர், சம்மந்தப்பட்ட அந்த மாணவியைத் தனது வீட்டுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி, அடிக்கடி நிகழவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாயார், இது குறித்து உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் நாட்ராயன் மீது பாலியல் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். அத்துடன், இந்த வழக்கில் உடனடியாக சம்மந்தப்பட்ட ஆசிரியரையும் அதிரடியாக கைதும் செய்துனர்.

அதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ஆசிரியர் நாட்ராயன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.