தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வெளிப்படையாக பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரின் ரகசிய போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் மங்களூருவில் அரசு வென்லாக் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அரசு அதிகாரியாகவும் சுகாதார துறை மருத்துவர் மற்றும் நோடல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்து வந்தார் 50 வயதான ரத்னாகர். 

இப்படியாக, அந்த அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த 50 வயதான ரத்னாகருக்கு கீழ் ஒப்பந்த முறையில் பல பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இப்படியாக, ஒப்பந்த முறையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அரசு பணியில் அமர்த்துவதாக அவர்களை நம்ப வைத்து, அவர்களது ஏழ்மையையும், சூழலையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த மருத்துவர், தனக்கு கீழ் ஒப்பந்த முறையில் பணியாற்றும் பெண் செவிலியர்களுக்கும், பெண் மருத்துவர்களுக்கும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த மருத்துவரின் பாலியல் சீண்டல்களைப் பொறுத்துக்கொண்ட அந்த பெண் ஊழியர்கள், ஒரு கட்டத்தில் அவரின் பாலியல் சீண்டல்கள் எல்லாம் எல்லை மீறி போவதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தும், திகைத்துப் போயும் நின்று உள்ளனர்.

குறிப்பாக, அந்த மருத்துவமனையில் அனைவரும் கண் முன்னே பல பெண் ஊழியர்களைக் கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது மற்றும் அந்த பெண்களின் இடுப்பை பிடித்து கிள்ளுவது என்று, அவர் அத்து மீறி வெளிப்படையாகவே நடந்துகொண்டார்.

முக்கியமாக, பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் செவிலியர்களை கட்டி பிடித்து நடனம் ஆடுவதும், அவர்களது மடியில் அமர்ந்து வேடிக்கை காட்டுவது உள்பட பல்வேறு பாலியல் சில்மிஷத்தில் அந்த 50 வயது மருத்துவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மிக முக்கியமாக, பல நேரங்களில் அந்த பெண் ஊழியர்களை வெளியே அழைத்துச் சென்று ஊர் சுற்றியும் அவர் வந்திருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், அவரின் மன்தம லீலைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தப்பித்து வந்தனர்.

இப்படியான சூழலில் தான், அந்த மருத்துவர் தன்னுடைய பாலியல் சீண்டல்களைத் தனது செல்போனிலேயே படமாக எடுத்து வைத்துக்கொண்டு, அதனை சம்மந்தப்பட்டவர்களுக்கே அனுப்பி மகிழ்ந்திருக்கிறார்.

இதனைப் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்கள், இவர் செய்யும் பாலியல் சில்மிஷங்களை தங்களது செல்போனில் வீடியோவாகவும், போட்டோக்களாகவும் எடுத்து  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

இதனால், அரசு மருத்துவர் ரத்னாகரின் சர்ச்சைக்குறிய அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரல் ஆனது.

இதனையடுத்து, அந்த அரசு மருத்துவர் கடந்த 7 ஆம் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், அவர் தற்போது அந்த சஸ்பெண்ட் உத்தரவிற்குத் தடை வாங்கிக்கொண்டு, மீண்டும் அவர் தனது பதவியில் தொடர்ந்து வருவதுடன், தனது பாலியல் தொல்லைகளைத் தொடர்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால், அந்த பலான மருத்துவரை கட்டுப்படுத்த முடியாமல் அந்த மருத்துவமனையின் பெண் ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.