விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த தொடரில் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி தொடரில் நடித்து வந்தார் அந்த தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.இதனை தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ள கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்பமாக இருப்பதை சஞ்சீவ் ஒரு லைவில் தெரிவித்திருந்தார்.தற்போது தங்கள் யூடியூப் சேனலில் சஞ்சீவ் ஆல்யா மானசா இருவரும் இரண்டாவது முறையாக குழந்தை பிறக்கப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அதனால் சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகவில்லை சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.