தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் நல்ல படைப்புகளை வழங்கி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அனைத்து தொடர்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முன்னணி இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் கழகத் தலைவர் துரை படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் மாமன்னன்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் ஃபகத் பாசில், வைகைபுயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.R.K படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜின் கழுத்திற்கு அருகே துப்பாக்கியை பிடித்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#Maamannan @mari_selvaraj pic.twitter.com/NvYemi6q5X

— Udhay (@Udhaystalin) August 27, 2022