ரசிகர்களுக்கு விருந்தளிக்க பல வெற்றிபடங்களை கொடுத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா.தனக்கென தனிபாணியை வைத்து இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாரதிராஜா.இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார் பாரதிராஜா.

ஆயுத எழுத்து,பாண்டியநாடு,குரங்கு பொம்மை,நம்ம வீட்டு பிள்ளை,ஈஸ்வரன்,ராக்கி,திருச்சிற்றம்பலம் என பல சூப்பர்ஹிட் படஙக்ளில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் பாரதிராஜா.திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டி வருகின்றனர்.சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாரதிராஜா,பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக மற்றுமொரு தனியார் மருத்துவமனைக்கு இவர் மாற்றப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது.

தற்போது பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் சிகிச்சை காரணமாக நலம் பெற்று வருகிறேன்.மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாததால் யாரும் தன்னை யாரும் காண வரவேண்டாம் என்று கனிவோடு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் தான் மருத்துவமனையில் அனுமதியானதும் விரைவில் குணமடைய வேண்டிய பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.