விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு எதிர்பாராமல் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, பின்னர் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தடைபட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது

சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியன்-2 திரைப்படத்துக்கு மற்றொரு பலமாக தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். முன்னணி எழுத்தாளர் B.ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் வசனங்களை எழுதியுள்ளனர்.

கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ரகுல் பிரித் சிங் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக வருவதாக தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…
rakul preet singh joins in indian 2 movie shoot kamal haasan shankar