தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சீயான் விக்ரம்.கடின உழைப்பால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விக்ரம்.இவரது வித்தியாசமான படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அடுத்ததாக இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.கோப்ரா படத்தினை டிமான்டி காலனி,ஜமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய   அஜய் ஞானமுத்து.7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே எஸ் ரவிக்குமார்,ரோஷன் மேத்யூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடம் என்பதும் படத்தின் சென்சார் சர்டிபிகேட் மூலம் தெரியவந்துள்ளது.

chiyaan vikram cobra movie censored ua runtime details srinidhi shetty