வெற்றிமாறன் - அமீர் கூட்டணியில் உருவாகவுள்ள ‘இறைவன் மிகப் பெரியவன்’.. சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கவிஞர் சினேகன் - முழு வீடியோ இதோ..

அமீரின் புதிய படம் குறித்து தகவல் பகிர்ந்த கவிஞர் சினேகன் - Snehan about iraivan miga periyavan song | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலைஞர் இயக்குனரும் நடிகருமான அமீர். 2002 சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அதன் பின் ஜீவா நடிப்பில் வித்யாசமான திரைக்கதையுடன் ‘ராம்’ திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெற்றார் இயக்குனர் அமீர். ‘பருத்தி வீரன்’ என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் கொடுத்து இந்திய சினிமா அளவில் கவனம் பெற்றார் இயக்குனர் அமீர். நடிகர் கார்த்தி அறிமுகமான இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. அதன் பின் இயக்குனர் அமீர் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அவர் நடித்த ‘யோகி’ திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது நடிகராக அமீர் வெற்றியை பெற்றார். அதன் பின் அமீர் ஜெயம் ரவியை வைத்து 2013 ல் வேறு ஒரு தளத்தில் ‘ஆதிபகவன்’ படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் நினைத்த அளவு வரவேற்பை பெறவில்லை.   அதன் பின் நடிப்பிலும் இயக்குனராகவும் நீண்ட இடைவெளியை எடுத்துகொண்டார் அமீர். நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன் பின் மாறன் படத்தில் நடித்தார்.

தற்போது அமீர் 10 ஆண்டு இடைவெளிக்கு பின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் தங்கம். மேலும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் சூரி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் கவிஞர் சினேகன். கவிஞர் சினேகன் – அமீர் கூட்டணியில் இதற்கு முன்பு ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஆராரிராரோ’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

very first time thalapathy vijay varisu team announced the malayalam version titleஇந்நிலையில் கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான கன்னிகா ஆகியோர் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டனர். இதில் அவர்களின் வாழ்கை குறித்தும் காதல் கதை மற்றும் சினேகன் அவரது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் அமீர் இயக்கவிருக்கு இறைவன் மிகப்பெரியவன் என்ற படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார் கவிஞர் சினேகன். அதில் அவர்,  "யுவன் சாரும், அமீர் சாரும் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்திற்கான இசையமைப்பில் இருக்கும் போது ஒரு அற்புதமான டியூன் கிடைத்துள்ளது. அதை என்னிடம் கூட போட்டு காட்டவில்லை. அப்படத்திற்கு எல்லா பாடலும் நான்தான் எழுதுகிறேன். திடீர்னு ஒருநாள் அமீர் சார் ஒரு பாடல் இருக்கு, அதை உங்களிடம் காட்ட வேண்டும் என்று சொன்னார். நானும் கொடுங்கள் எழுதிடுவோம் னு சொன்னேன். அவர்,  இல்லை..அந்த பாடல் உங்கள் மகளுக்கு நீங்கள் எழுதுவதாய் இருக்க வேண்டும் அப்போது தருகிறேன் என்று சொன்னார். சினேகனுக்கு குழந்தை பிறந்து அதை அவர் பார்க்கும் போது இந்த பாடல் எழுதனும் அப்போது தான் அந்த உணர்வு கிடைக்கும். ஏன்னா சினேகனுக்கு அவங்க அம்மா மேல அவ்வளவு பாசம், அது அவரோட குழந்தை மீது கிடைக்கும் போது அப்போது அதை எழுத வைக்கனும். அப்போது அந்த ட்யூனை அவருக்கு பரிசா கொடுப்போம் என்று யுவனும் அமீர் சாரும் இரண்டு பேரும் பேசி வெச்சிருக்காங்க.. " என்றார் பாடலாசிரியர் சினேகன்.

மேலும் கவிஞர் சினேகன் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோ இதோ..

பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் மாஸ் காட்டும் சியான் விக்ரம் – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் மாஸ் காட்டும் சியான் விக்ரம் – வைரலாகும் Glimpse இதோ..

“ஒரு நம்பிக்கை இருந்தாலும் பயமும் இருக்கு”. – வாத்தி மேடையில் தனுஷ் சுவாரஸ்யமான பேச்சு.. - வைரலாகும் வெளியீட்டு விழா வீடியோ இதோ..
சினிமா

“ஒரு நம்பிக்கை இருந்தாலும் பயமும் இருக்கு”. – வாத்தி மேடையில் தனுஷ் சுவாரஸ்யமான பேச்சு.. - வைரலாகும் வெளியீட்டு விழா வீடியோ இதோ..

சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு .. ரசிகர்களுக்கு Surprise கொடுத்த புகைப்படம் இதோ..
சினிமா

சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு .. ரசிகர்களுக்கு Surprise கொடுத்த புகைப்படம் இதோ..