உலக நாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... இயக்குனர் ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

கமல்ஹாசனின் இந்தியன் 2 அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஷங்கர்,ulaganayagan kamal haasan director shankar in indian 2 shoot resumed | Galatta

தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கும் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார் உலகநாயகன். 

இது போக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தையும் இயக்குனர் ஷங்கர் தொடங்கினார். 

பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கிய நிலையில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ஒரே சமயத்தில் சரியாக திட்டமிட்டு நேர்த்தியாக இயக்கி வருகிறார் ஷங்கர். கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடைந்து இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரே சமயத்தில் இரண்டு பிரம்மாண்ட படைப்புகளான இந்தியன் 2 மற்றும் RC15 என இரண்டு திரைப்படங்களையும் கனகச்சிதமாக திட்டமிட்டு இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ராம்சரணின் RC15 படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, தற்போது அடுத்த கட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு திரும்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் இயக்குனர் ஷங்கரின் அந்த பதிவு இதோ…
 

Back on the sets of #Indian2 pic.twitter.com/B3ByCedXHc

— Shankar Shanmugham (@shankarshanmugh) February 16, 2023

ரசிகர்கள் எதிர்பார்த்த தளபதி விஜயின் வாரிசு பட அடுத்த சர்ப்ரைஸ்... OTT ரிலீஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த தளபதி விஜயின் வாரிசு பட அடுத்த சர்ப்ரைஸ்... OTT ரிலீஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

ஜெய் பீம் பட நடிகையின் கவனம் ஈர்க்கும் புது படம்... காதலர் தினத்தில் ரசிகர்களின் புருவத்தை உயர்த்திய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சினிமா

ஜெய் பீம் பட நடிகையின் கவனம் ஈர்க்கும் புது படம்... காதலர் தினத்தில் ரசிகர்களின் புருவத்தை உயர்த்திய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சினிமா

"நீ சிறந்தவன்... நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!"- காதலர் தினத்தில் தனது காதலர் குறித்து மனம்திறந்த ஸ்ருதி ஹாசன்! விவரம் உள்ளே