இந்தியாவில் தளபதி விஜயின் வாரிசு எப்போது? - OTT ல் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு.. விவரம் உள்ளே..

ஒடிடியில் வெளியாகும் தளபதி விஜயின் வாரிசு வைரலாகும் அப்டேட் இதோ - Varisu team announced OTT release on this date | Galatta

கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’ தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய கொண்டாட்டத்தின் மத்தியில் வெளியான வாரிசு உலகமெங்கும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  உலகமெங்கும் 300 ரூபாய் கோடி வசூல் பெற்று தொடர்ந்து சாதனை பெற்று வரும் வாரிசு திரைப்படத்தை மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டாடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே வாரிசு பட வெற்றியை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள் லியோ பட அறிவிப்பையும் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ள தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் பிப்ரவரி 22 ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த அறிவிப்பை அதிகளவு பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக இந்தியா இல்லாமல் மற்ற நாடுகளில் வாரிசு திரைப்படம் வரும் பிப்ரவரி 22 ம் தேதி SUN NXT தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Get ready to experience this captivating story laced with emotional turmoil!#VarisuOnPrime, Feb 22 only on @PrimeVideoIN in Tamil, Telugu and Malayalam.#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu #Vaarasudu #Vamshajan pic.twitter.com/Rry3P3KJYY

— Sri Venkateswara Creations (@SVC_official) February 17, 2023

மிகப்பெரிய வெற்றி பெற்ற வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜு சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமஸ் இசையமைத்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.  மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர்  கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். வாரிசு திரைப்படம் இந்த ஆண்டு வெளியான முதல் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படம் என்ற பெருமையை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடடதக்கது.

“ஒரு நம்பிக்கை இருந்தாலும் பயமும் இருக்கு”. – வாத்தி மேடையில் தனுஷ் சுவாரஸ்யமான பேச்சு.. - வைரலாகும் வெளியீட்டு விழா வீடியோ இதோ..
சினிமா

“ஒரு நம்பிக்கை இருந்தாலும் பயமும் இருக்கு”. – வாத்தி மேடையில் தனுஷ் சுவாரஸ்யமான பேச்சு.. - வைரலாகும் வெளியீட்டு விழா வீடியோ இதோ..

சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு .. ரசிகர்களுக்கு Surprise கொடுத்த புகைப்படம் இதோ..
சினிமா

சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு .. ரசிகர்களுக்கு Surprise கொடுத்த புகைப்படம் இதோ..

AK62, இந்தியன் 2 படங்களை தொடர்ந்து பிரபல ஹீரோவுடன் இணைந்த லைகா நிறுவனம் – புதிய படத்தின் அப்டேட் வைரல்..
சினிமா

AK62, இந்தியன் 2 படங்களை தொடர்ந்து பிரபல ஹீரோவுடன் இணைந்த லைகா நிறுவனம் – புதிய படத்தின் அப்டேட் வைரல்..