முதல் முதலில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மலையாள டைட்டிலை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் அறிவிப்பு இதோ.

வாரிசு மலையாள டப் திரைப்படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு - Varisu movie titled malaiyalam version as vamshajan | Galatta

தமிழ் நடிகர்களுக்கு மற்ற மொழி ரசிகர்கள் இருப்பது வழக்கம் தான். ஆனால் மற்ற மொழியில் தனக்கென்ற ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமிழ் நடிகர்களின் மிக முக்கியமானவர் தளபதி விஜய். பொதுவாகவே விஜய் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் இடமாக கேரளா உள்ளது. எந்தளவு தமிழில் தீவிர ரசிகர்கள் அவருக்கு உள்ளார்களோ அதே அளவு மலையாளத்திலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுடன் போட்டி போடும் அளவு தளபதி விஜயின் திரைப்படம் அங்கு வெற்றி பெரும். மேலும் பல படங்களில் தளபதி விஜய் படங்கள் குறித்த ரெபரன்ஸ்கள் கொண்டு மலையாள சினிமாக்கள் சமீபத்தில் அதிகமாகி வருகிறது.

மேலும் தளபதி விஜய் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து நடித்து கடந்த 2012 ல் வெளியான ‘ஜில்லா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு கேரளாவில் கொடுத்தது. அதன் படி எந்த விஜய் திரைப்படம் வெளியானாலும் அதை மலையாளத்தில் டப் செய்து வெளியிடுவது வழக்கம்

அதன்படி கடந்த கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. வெளியான நாள் முதல் இன்று வரை கொண்டாட்டங்களும் ரசிகர்களின் ஆரவராமும் நிறைந்தே வாரிசு திரைப்படம் ஓடி கொண்டிருக்கிறது. அதன்படி உலகமெங்கும் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற வாரிசு திரைப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து மொழியிலும் நல்ல வரவேற்பையே பெற்றது. மிகப்பெரிய வெற்றி பெற்ற வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜு சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடடதக்கது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வரும் பிப்ரவரி 22 ம் தேதி பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இந்தியளவு  வெளியாகவுள்ளது. மேலும் இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் அதே நாளில் SUN NXT தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பினை தற்போது ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

thalapathy vijay blockbuster movie varisu to premiere in india on primeஇந்நிலையில் இந்த அறிவிப்புடன் வாரிசு திரைப்படத்தின் மலையாள டப் மொழி படத்தின் டைட்டிலை வெளியட்டுள்ளது படக்குழு. அதன்படி படத்திற்கு ‘வம்ஷஜன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக தெலுங்கில் ‘வாரசுடு’ என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விஜய் படத்தை தற்போது மலையாளத்தில் பார்க்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் அதனை பகிர்ந்து வருகின்றனார்.

Get ready to experience this captivating story laced with emotional turmoil!#VarisuOnPrime, Feb 22 only on @PrimeVideoIN in Tamil, Telugu and Malayalam.#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu #Vaarasudu #Vamshajan pic.twitter.com/Rry3P3KJYY

— Sri Venkateswara Creations (@SVC_official) February 17, 2023

வெற்றிமாறன் - அமீர் கூட்டணியில் உருவாகவுள்ள ‘இறைவன் மிகப் பெரியவன்’.. சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கவிஞர் சினேகன் -  முழு வீடியோ இதோ..
சினிமா

வெற்றிமாறன் - அமீர் கூட்டணியில் உருவாகவுள்ள ‘இறைவன் மிகப் பெரியவன்’.. சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கவிஞர் சினேகன் - முழு வீடியோ இதோ..

“ஒரு நம்பிக்கை இருந்தாலும் பயமும் இருக்கு”. – வாத்தி மேடையில் தனுஷ் சுவாரஸ்யமான பேச்சு.. - வைரலாகும் வெளியீட்டு விழா வீடியோ இதோ..
சினிமா

“ஒரு நம்பிக்கை இருந்தாலும் பயமும் இருக்கு”. – வாத்தி மேடையில் தனுஷ் சுவாரஸ்யமான பேச்சு.. - வைரலாகும் வெளியீட்டு விழா வீடியோ இதோ..

சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு .. ரசிகர்களுக்கு Surprise கொடுத்த புகைப்படம் இதோ..
சினிமா

சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு .. ரசிகர்களுக்கு Surprise கொடுத்த புகைப்படம் இதோ..