ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் தளபதி விஜய் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகளுக்காக தான். விரைவில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் நமது கலாட்டா பிளஸ் தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல சுவாரஸ்யமான விஷயங்களை மனம் திறந்து பேசினார்.

அந்த வகையில், தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் பலருக்கு முன் உதாரணமாக திகழ்கிறீர்கள். அடுத்த லோகேஷ் கனகராஜ் ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் வருங்கால இயக்குனர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்ன..? எனக் கேட்டபோது, 

“எந்த அட்வைஸும் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பது தான். நான் இயக்குனராக போகிறேன் என்று தெரிவதற்கு முன்னால் எனக்கு நிறைய இன்ஸ்பிரேஷன் இருந்தார்கள் ராம்கோபால் வர்மா முதல் கௌதம் மேனன் சார், எப்போதும் சொல்வது போல மணிரத்தினம் சார், கமல் சார் எல்லாருமே… அவர்களாக ஆக வேண்டும் என முயற்சி செய்ய முடியாது. ஒரு கட்டத்தில் நாம் என்னவாக இருக்கப் போகிறோம் என்பதுதான். என்னை பொருத்தவரைக்கும் எழுதுவதை மிகவும் உறுதியாக முதல் படத்திலேயே மிகவும் ஆணித்தரமாக சொல்லிவிட்டால் மக்கள் நம்மை பின் தொடர ஆரம்பித்து விடுவார்கள் நமது வேலைகளையும்... பின்னர் அவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் நாம் இன்னும் நன்றாக செய்ய முடியும். நாம் எந்த மாதிரி திரைப்படங்கள் செய்வதற்காக வந்தோம். எதற்காக இதை செய்கிறோம் எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள். அது போக போக கற்றுக் கொள்வது தான். ஆரம்ப கட்டத்தில் நிறைய தப்பு தப்பாக செய்து அதை நாமே பார்த்து சிரித்து என்ன இப்படி செய்திருக்கிறோம் என அதில் இருந்து கற்றுக்கொண்டு வளர்கிறோம். அந்த வகையில் அது ஒரு வியாபாரமாக வரும்போது, நம்மை நம்பி ஒருவர் பணம் கொடுக்கிறார் என்று வரும்போது, எனக்குத் தெரிந்து நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம், உட்கார்ந்து எழுதுவது தான். அது 90% முடிந்துவிட்டால் மீதி 10% மேக்கிங்கில் தவறாக இருந்தாலும் ரசிகர்கள் மன்னித்து விடுவார்கள். எழுத்து சரியாக இருந்தால் நியாயமாக இருக்கும். இது ஒன்றுதான் அவர்களுக்கு நான் கொடுக்கும் அட்வைஸ் அல்ல ஒரு ஆலோசனை” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த முழு வீடியோ இதோ…