வருகிற 2023ஆம் ஆண்டு ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் குமாரின் துணிவு மற்றும் தளபதி விஜயின் வாரிசு ஆகிய படங்கள் ஒரே நாளில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாவதால் ரசிகர்களும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர் 

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, ஜான் கொக்கென், சிபி புவனச்சந்திரன்,பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், GM.சுந்தர், பிரேம், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு படத்தை வெளிநாடுகளில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய நடிகர் தர்ஷன் மற்றும் மோகன சுந்தரம் இருவரும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.அந்த வகையில் துணிவு படத்தில் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் என நடிகர் தர்ஷனிடம் கேட்டபோது,

“முதலில் வினோத் சாரின் ஆபீஸில் அவரை சந்தித்த உடனே முதலில் போன் செய்ததே அவருக்கு (சிவகார்த்திகேயன்) தான். இந்த மாதிரி சொல்லியிருக்கிறார்கள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன். "ஹே சூப்பர் டா" என மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். “சூப்பர் நல்லா பண்ணிட்டு வா" என சொன்னார்..” என தர்ஷன் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்த அந்த முழு வீடியோ இதோ…