தமிழ் திரை உலகின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரம், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்ட ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார்.

இதனையடுத்து தனது தந்தையான சீயான் விக்ரம் அவர்களுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்தார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

மகான் திரைப்படத்தில் மிரட்டலாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்த நடிகர் துரு விக்ரம் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் இசை மீதான தனது ஆர்வத்தை வெளிபடுத்த வருகிறார் அந்த வகையில் ஆதித்ய வர்மா மற்றும் மகான் ஆகிய திரைப்படங்களில் பாடல்களைப் பாடினார். தொடர்ந்து சுயாதீன இசை கலைஞராக தனது பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு சுயாதீன இசைக் கலைஞராக தனது பாடல்களை வெளியிட உள்ளதாக விக்ரம் தெரிவித்த துருவ் முதல் பாடலின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் தனது முதல் மியூசிக் வீடியோவாக வெளிவரவிருக்கும் மனசே பாடலின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த பாடலின் டைட்டில் போஸ்டர் இதோ…
 

#Manase #மனசே is the title of #DhruvVikram's Independent Musical Album's #Track1. Song Releasing soon 🎶 pic.twitter.com/4dhP94xC7r

— Yuvraaj (@proyuvraaj) September 3, 2022