தமிழக மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த தி லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜண்ட். தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கியுள்ளனர். 

பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னர் படமாக தயாராகியுள்ள  தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா, கீதிகா கதாநாயகிகளாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், விஜயகுமார் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள தி லெஜண்ட் படத்திற்கு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் பா.விஜய், கவிஞர் கபிலன், கவிஞர் மதன் கார்க்கி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் தி லெஜண்ட் படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர்.

முன்னதாக முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட தி லெஜண்ட் திரைப்படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று மே 29-ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வெளியான தி லெஜண்ட் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி லெஜண்ட் திரைப்படத்தின் JUKEBOX தற்போது வெளியானது. தி லெஜண்ட் படத்தின் மொத்த பாடல்களும் அடங்கிய JUKEBOX இதோ…