பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் நடிகர் ஆமிர் கான் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்கிறார். குறிப்பாக லகான், மங்கள் பாண்டே, ரங் தே பசந்தி, ஃபனா, தாரே ஜமீன் பர், கஜினி, 3 இடியட்ஸ், PK, தங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிற மொழி ரசிகர்கள் மனதியிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

இந்த வரிசையில் அடுத்ததாக ஆமிர் கான் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் லால் சிங் சத்தா. ஹாலிவுட்டில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்து வெளிவந்து அனைவரது மனதையும் கொள்ளையடித்த மெகா ஹிட் திரைப்படமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தைத் தழுவி உருவாகியிருக்கும் லால் சிங் சத்தா படத்தை இயக்குனர் அட்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள லால் சிங் சத்தா படத்தில் நடிகை கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, மோனா சிங், நாகசைதன்யா, நிகர் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முக்கியமான கௌரவ தோற்றத்தில் ஷா ருக் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லால் சிங் சத்தா படத்திற்கு சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவில் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைக்க, தனுஜ் டிக்கு பின்னணி இசை கொடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…