தமிழக மக்களின் ஃபேவரட்டான ரேடியோ ஜாக்கியாக திகழ்ந்த ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது முன்னணி கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த LKG படத்தில் அரசியலை நய்யாண்டியோடு கையாண்டு வெற்றிபெற்ற ஆர்.ஜே.பாலாஜி அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்தார். ஆர்.ஜே.பாலாஜி-நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஹிட்டடித்த பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வீட்ல விசேஷம் திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி-NJ.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வீட்ல விசேஷம் படத்தில் ஊர்வசி, சத்தியராஜ், லலிதா, அபர்ணா பாலமுரளி, புகழ், யோகிபாபு, ஷிவானி நாராயணன், பவித்ரா லோகேஷ், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வீட்ல விசேஷம் திரைப்படத்திலிருந்து தற்போது டாடி பாடல் வெளியானது கலக்கலான அந்த பாடலை கீழே உள்ள லிங்கை காணலாம்.