தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் சூர்யா நடிப்பில் முன்னதாக இந்த ஆண்டு வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து சுவாரசியமான திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலாவுடன் இணைந்துள்ள நடிகர் சூர்யா தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைகிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஈசிஆரில் பிரத்தியேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற செயலாளர் உயிரிழந்த சம்பவம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற செயலாளரான நாமக்கல்லை சேர்ந்த ஜெகதீஷ் விபத்தில் உயிரிழந்த செய்தியை கேட்ட நடிகர் சூர்யா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு சூர்யா ஆறுதல் தெரிவிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…