தன்னம்பிக்கைக்கு அடையாளமாக கடின உழைப்பின் மொத்த உருவமாக திகழும் லெஜண்ட் சரவணன் அவர்கள் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து புது ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர். இதனை தொடர்ந்து தற்போது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்குகிறார் லெஜண்ட் சரவணன்.

பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள தி லெஜண்ட் படத்தில் கதாநாயகனாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் படத்திற்கு  R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தி லெஜண்ட் படத்திலிருந்து வெளிவந்த மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகிகள் பலரும் கலந்து கொண்ட தி லெஜண்ட் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா தற்போது  சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிலையில், தி லெஜண்ட் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…