பல கோடி கன்னட சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி நட்சத்திர நாயகராகவும் திகழும் நடிகர் கிச்சா சுதீப் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் உட்பட பிறமொழி ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் பல மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிச்சா சுதீப் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து விக்ராந்த் ரோணா படத்தை தயாரித்துள்ளன.

பிரம்மாண்டமான ஃபேண்டஸி-ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ள விக்ராந்த் ரோணா திரைப்படத்தில் சுதீப் உடன் இணைந்து நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ் மற்றும் வாசுகி வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள விக்ராந்த் ரோணா திரைப்படம் வருகிற ஜூலை 28-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் தற்போது வெளியானது. அசத்தலான விக்ராந்த் ரோணா ட்ரைலர் இதோ…