தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவனை, அங்கிருந்தவர்கள் சூழுந்துகொண்டு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சரயு நதி ஒன்று உள்ளது. அந்த சரயு கங்கையின் 7 துணை நதிகளில் ஒன்றாக வணங்கப்படுகிறது.

அதாவது, ராமர் பிறந்த அயோத்தி, சரயு நதிக்கரையில் அமைந்து உள்ளதால், இந்துக்களால் இது புனிதமான நதியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நதியில் குளித்த பிறகு தான், அங்குள்ள கோயிலில் பக்தர்கள் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். 

இப்படியான சூழுலில் தான், இந்த சரயு நதிக்கரையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கணவன் - மனைவியினர், தம்பதிகளாக வந்து குளித்து கொண்டிருந்தனர். 

அப்போது, அந்த கணவன் தனது மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுக்க முயன்றார். 

இந்த சம்பவத்தை, அங்கிருந்துக்கொண்டு சிலர் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தில் குளித்து கொண்டிருந்தவர்களுமு் இதனைப் பார்த்து ஆத்திரமடைந்து உள்ளனர்.

இதனால், அந்த கணவனின் அருகில் சென்று, அந்த கணவனை அவரது மனைவி முன்னிலையே கண்ணத்தில் அறைந்து, பின்னர் அவரை தண்ணீரில் இழுத்து சென்று தாக்கி உள்ளனர். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரை மீட்க அவர்களிடம் இருந்து போராடி உள்ளார்.

ஆனால், அந்த மனைவியால் ஒன்றும் செய்ய முடியாமல் போகவே, அந்த பெண்ணின் கணவனை அங்கிருந்தவர்கள் தாக்கி உள்ளனர்.

அப்போது, தனது கணவனை எதற்காக தாக்குகிறார்கள் என்பது கூட தெரியாமல், அந்த கணவனும் - மனைவியும் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து உள்ளனர்.

அப்போது, அந்த கணவனை தாக்கியவர்களில் ஒருவர், “அயோத்தியில் இது போன்ற அசிங்கத்தை பொறுத்து கொள்ள முடியாது” என்று, ஆவேசமாக கூறினார்.

அப்போது தான், “இந்த நதியில் வைத்து தனது மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காக, தன்னை தாக்கினார்கள்” என்பது அந்த அப்பாவி கணவனுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த கணவன் - மனைவியை அந்த நதியில் இருந்து வெளியேற்றினர்.

இந்த காட்சிகளை எல்லாம் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், இது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இது குறித்து இணையவாசிகள் பலரும், “மனைவிக்கு முத்தம் கொடுத்தது தப்பா?” என்று, கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.