தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் இயக்குனர் பார்த்திபன் முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் எனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மேலும் வருகிற ஜூன் 17ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ரிலீசாகவிருக்கும் சுழல் வெப்சைட்டில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனிடையே இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த சாதனை முயற்சியாக உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie) திரைப்படமாக தயாராகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவு நிழல் இரவு நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடுகிறார். இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து இரவின் நிழல் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இரவின் நிழல் படத்திலிருந்து கண்ணெதிரே பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியானது. கண்ணெதிரே பாடல் லிரிக்கல் வீடியோ இதோ…