வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளரின் புது ஸ்போர்ட்ஸ் படம்... ஹிப்ஹாப் ஆதியுடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகை!
By Anand S | Galatta | December 21, 2022 15:36 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வென்று தணிந்தது காடு திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 23வது திரைப்படமாக தயாராகும் அடுத்த புதிய திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் 7-வது திரைப்படமாக தயாராகும் இந்த புதிய #HHT7 திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார். மாதேஷ் மாணிக்கம் ஒழிப்பதிவில், GK.பிரசன்னா படத்தொகுப்பு செய்யும் #HHT7 திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
சமீபத்தில் பூஜையோடு தொடங்கப்பட்ட #HHT7 திரைப்படத்தில் ஒரு பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க, கதாநாயகியாக இளம் நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். மேலும் இளைய திலகம் பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் பிரபல இளம் நடிகை காஷ்மிரா பரதேசி இணைந்துள்ளார் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த அன்பறிவு திரைப்படத்தில் இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை காஷ்மிரா பரதேசி மீண்டும் 2வது முறையாக ஆதியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிவிக்கும் வகையில் HHT7 படத்தின்புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
Talented actress @kashmira_9 onboard for @VelsFilmIntl's #HHT7 starring & Music by @hiphoptamizha
— Vels Film International (@VelsFilmIntl) December 20, 2022
Dir by @karthikvenu10
Prod by @IshariKGanesh @editor_prasanna @madheshmanickam@Ashkum19 @swapnaareddy @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/xjjLWf9Wja