சூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... சர்ப்ரைஸாக வெளியான ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | December 20, 2022 20:40 PM IST

தனக்கே உரித்தான பாணியில் படத்திற்கு படம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தரமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தென்னிந்திய திரை உலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், RJபாலாஜி உடன் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரியில் வெளிவர உள்ளது.
மேலும் டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவநட்சத்திரம் மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக பாலிவுட்லும் களமிறங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மாணிக் எனும் திரைப்படம் தயாராகியுள்ளது
இதனிடையே மலையாளத்தில் வெளிவந்து இந்திய சினிமாவில் பலரது கவனத்தையும் ஈர்த்த சூப்பர் ஹிட் திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை RDC மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய, ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
We are elated to release the Tamilnadu Theatrical of Aishwarya Rajesh starring #TheGreatIndianKitchen ( Tamil ) Directed by R.Kannan
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) December 20, 2022
Grand Release on December 29 in theatres
Produced by Durgaram Choudhary, Neel Choudhary@RDCMediaPvtLtd @aishu_dil @23_rahulr pic.twitter.com/jZzEPIubcB