என்றென்றும் ரசிகர்களின் இதயங்களில் ஃபேவரட் ஹீரோவாக தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தளபதி67 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சூர்யா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்த பக்கா ஆக்சன் படமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 67 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்ற நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வரிசையாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளிவரும் என சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். முன்னதாக விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாகவும், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் தளபதி 67 திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஷாம், தளபதி 67 படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது திரை பயணம் குறித்தும் வாரிசு திரைப்படம் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை ஷாம் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் தன்னுடன் இணைந்து நடித்த கதாநாயகிகள் குறித்தும் அவர்களது தற்போதைய நிலை குறித்தும் மனம் திறந்து பேசிய ஷாம், “த்ரிஷா என்னுடன் இணைந்த லேசா லேசா திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவருடைய முதல் படமாக மௌனம் பேசியதே ரிலீஸ் ஆனது. அவர் மிகவும் எளிமையானவர். அதே சமயத்தில் நான் அவரைப் பற்றி பலரிடம் சொல்லி இருக்கிறேன் மிகவும் STUNNINGஆக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அதே அழகோடு இருக்கிறார் என்றால் தனது கரியரில் அவ்வளவு முனைப்போடு இருக்கிறார். தன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார். தனது உடலை நன்றாக பார்த்துக் கொள்கிறார். தனது கரியரை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். அதை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். இப்போது கூட தளபதி 67 பூஜைக்கு வந்திருந்த த்ரிஷாவை பார்த்த எனது நண்பர்கள், “பா.. சார் வேற மாறி இருக்காங்க” என சொன்னார்கள். ஆனால் 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதற்கு காரணம் அவரது இதயம் மிகவும் தூய்மையானது” என ஷாம் தெரிவித்துள்ளார். எனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி67ல் விஜய் - த்ரிஷா இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட ஷாமின் அந்த முழு பேட்டி இதோ…