தென்னிந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகள் ஒருவராக தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், RJபாலாஜி உடன் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரியில் வெளிவர உள்ளது. முன்னதாக பாலிவுட்டிலும் மாணிக் படம் மூலம் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவநட்சத்திரம் மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. 

வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார். கோகுல் பெண்டி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக்காக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. டிசம்பர் 29ஆம் தேதி தி கிரேட் இந்தியன் கிச்சன் & டிசம்பர் 30ம் தேதி டிரைவர் ஜமுனா என அடுத்தடுத்த நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படங்கள் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

The wait is Over. Join the thrilling trip as @aishu_dil's #DRIVERJAMUNA worldwide release on Dec 30.#DriverJamunaFromDec30@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy @ThatsKMS @ahatamil @Synccinema @gobeatroute @knackstudios_ @proyuvraaj pic.twitter.com/lZtCiSpQTn

— Think Music (@thinkmusicindia) December 21, 2022