வருகிற செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள் வெளிவரவுள்ளன.

இந்த வரிசையில் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக மியூசிக்கல் ரொமான்டிக் திரைப்படமாக வெளிவருகிறது டூடி திரைப்படம். இயக்குனர்கள் கார்த்திக் மதுசூதனன் மற்றும் சாம்.RD.X இணைந்து இயக்கியுள்ள டூடி திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனங்களை எழுதிய இயக்குனர் கார்த்திக் மதுசூதனன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரீதா சிவதாஸ், ஜீவா ரவி, அர்ஜுன் மணிகண்டன், சனா ஷாலினி, ஸ்ரீரஞ்சினி, விஜய் மணிகண்டன், மதுசூதனன்GV, அக்ஷதா, எட்வின் ராஜ், உத்தாரா, ராணி சுவாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள டூடி திரைப்படத்தை கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.மதன் சுந்தர்ராஜ் மற்றும் சுனில் GN இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் டூடி திரைப்படத்திற்கு சாம்.RD.X படத்தொகுப்பு செய்துள்ளார். 

மியூசிக்கல் ரொமான்டிக் திரைப்படமாக தயாராகியிருக்கும் டூடி திரைப்படத்திற்கு KC.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி டூடி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், ப்ரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னதாக வெளியான டூடி படத்தின் ட்ரைலர் தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்ரைலர் இதோ…