கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,லைலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்து அசத்தியுள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது இதில் இரண்டாம் பாகம்  உருவாகும் என்ற அறிவிப்பை ஒரு அறிவிப்பு வீடியோவோடு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விரைவில் இரண்டாம் பாகம் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.