அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தனது அயராத உழைப்பால் & விடாமுயற்சியால் நிஜமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்களில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மேலும் தனது இசையால் மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் "இசைப்புயல்" ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை மாற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என கூறலாம்.

தற்போது 25 நாட்களை கடந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக வசூல் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தோடு இணைந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் ரிலீஸானது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசித்த இயக்குனர் செல்வராகவன், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக சோழர்களை மையப்படுத்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டரில், "எனது அனுபவத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் தான் மிக்ச்சிறந்த ஆல்பம்!!" என குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் அந்த பதிவு இதோ…
 

The best music album in my experience is with out doubt @arrahman and #maniratnam sir’s ponniyin Selvan ! The attention to detail in even the minutest sounds is astounding!

— selvaraghavan (@selvaraghavan) October 26, 2022