தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவராகவும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வலம் வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி அடுத்ததாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள MY3 வெப்சீரிஸ் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் MY3 வெப்சீரிஸ் ரிலீஸாகவுள்ளது. மேலும் மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர், உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்105 மினிட்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. 

தொடர்ந்து இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் தயாராகும் ரவுடி பேபி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் ஹன்சிகா, இயக்குனர் விஜய் சந்தரின் FILM WORKS தயாரிப்பில் இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஃபேண்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் இப்படத்திற்கு கார்டியன் என பெயரிடப்பட்டுள்ளது. சாம்.CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகாவின் கார்டியன் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Here you go, my 1st project as Producer!#Guardian First Look is here!

Starring @ihansika 😍#GuardianFirstLook

@FilmsWorkOffl @SamCSmusic @gurusaravanan @sabari_gireesn @shakthi_dop @artilayaraja @thiyaguedit @ActorSriman @Gopaljames1 @RIAZtheboss @proyuvraaj @CtcMediaboy pic.twitter.com/6Fo47mgvN2

— VIJAY CHANDAR (@vijayfilmaker) October 25, 2022