தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் தேர்ந்த நடிகராகவும் திகழும் நடிகர் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ப்ளாக பஸ்டர் ஹிட்டாகி வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ள கார்த்தி அனைத்து ரசிகர்களின் இதயத்திலும் வந்தியதேவனாக இடம்பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் வரும் தீபாவளி வெளியீடாக வருகிறது கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம். இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சர்தார் படத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடிக்க, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள சர்தார் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்யும் சர்தார் படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் முதல் பாடலாக நடிகர் கார்த்தி பாடியுள்ள ஏறுமயிலேறி எனும் பாடல் நாளை அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

#Yaerumayileri from #Sardar out TOMORROW at 5️⃣PM! 🎼

A @gvprakash musical sung by @Karthi_Offl ! 🔥#SardarDeepavali #SardarFirstSingle @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday pic.twitter.com/YGK1vHLiA8

— Sony Music South (@SonyMusicSouth) October 9, 2022