பிக்பாஸ் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அக்டோபர் 9ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்களையும் நட்சத்திரங்களாக இந்த நிகழ்ச்சி மாற்றியுள்ளது.

2017-ல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக ஐந்து சீசன்கள் கடந்து பெரிய ஹிட் நிகழ்ச்சியாக உள்ளது.பட்டிதொட்டி எங்கும் இந்த நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.ஐந்து சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்,ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளார்,இதற்கான சில ப்ரோமோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.இந்த முறை சீசன் 6 பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பானது போல பிக்பாஸ் தமிழின் 6ஆவது சீசன் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ளது

இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாளை பிக்பாஸ் தொடங்கவுள்ள நிலையில் புது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.கமல் வீட்டிற்குள் செல்லப்போவது போன்ற ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்