தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில நடிகர்கள் வெளியிட்டு வந்தனர்.இந்த புகைப்படங்களை பிக்பாஸ் அமீர் தனது ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் , இதில் அஜித் அந்த புகைப்படங்களை அமீருக்கு பகிர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் மூலம் அஜித்தின் Whatsapp ப்ரொபைல் புகைப்படம் என்ன என்பது தெரியவந்துள்ளது.அஜித் கார்,பைக் உள்ளிட்டவற்றில் ஆர்வம் உடையவர் என்பதாலும்,F1 போன்ற ரேஸ்களில் ஆர்வம் கொண்டவரும்,கலந்துகொண்டுள்ளதாலும் தனது கார் ரேஸிங் புகைப்படம் ஒன்றை DP-யாக வைத்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Okay This Photo Makes More Sense Now 😍🤩#AK pic.twitter.com/nr2N1ij7Fc

— Dharma Chandru (@dharmachandru) October 8, 2022