தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

முன்னதாக இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் அட்டகாசமான இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சர்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட சர்தார் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் அடுத்து தயாராகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முதல் வாரத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் கொண்டாடப்பட்ட சர்தார் திரைப்படம் இரண்டாவது வாரத்தில் அதிக திரைகளில் திரையிடப்படுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 380 திரைகளில் வெளியான சர்தார் திரைப்படம், தற்போது 2வது வாரத்தில் 500க்கும் மேற்ப்பட்ட திரையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

And the celebrations got bigger and grander.🥁🎉
#SardarBlockbuster 𝗲𝗻𝘁𝗲𝗿𝘀 𝘄𝗲𝗲𝗸 𝟮 𝘄𝗶𝘁𝗵 𝟱𝟬𝟬+ 𝘀𝗰𝗿𝗲𝗲𝗻𝘀. Book your tickets soon!#Sardar 🔥#Sardar2 🔥🔥@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash pic.twitter.com/NvS60OfSky

— Prince Pictures (@Prince_Pictures) October 27, 2022