தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காயத்ரி 18 வயசு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்திற்கு பிறகு பிரபலமடைந்தார். தொடர்ந்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த ஆண்டில் (2022) உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த காயத்ரி தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் முதல் முறை மலையாளத் திரை உலகில் கதாநாயகியாக களமிறங்கிய காயத்ரி நா தான் கேஸ் குடு படத்தில் நடித்தார்.

முன்னதாக பிரபுதேவாவுடன் இணைந்து காயத்ரி நடித்த பஹீரா திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படமும் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகும் கொரோனா பேப்பர்ஸ் எனும் திரைப்படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சித்திக் மற்றும் ஷேன் நிகம் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பூஜை இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
 

#GayathrieShankar, who recently made her Malayalam debut with 'Nna Thaan Case Kodu', signs her next #CoronaPapers - a #Priyadarshan Directional! 😍⭐🎬

Producer #AntonyPerumbavoor , #Siddique & #ShaneNigam attended the pooja held today.@SGayathrie @ParasRiazAhmed1 @V4UTALENTS pic.twitter.com/xdANF82RlN

— RIAZ K AHMED (@RIAZtheboss) October 27, 2022