தமிழ் சினிமாவில் பலருக்கும் கனவு கதாபாத்திரமாக திகழ்ந்த வல்லவராயன் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்த நடிகர் கார்த்தி அனைவரின் இதயங்களையும் கொள்ளையடித்தார். இந்த ஆண்டு(2022) நடிகர் கார்த்தியின் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட்டாக அமைந்தது என்று சொல்லலாம். விருமன், பொன்னியின் செல்வன் & சர்தார் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.

அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் & ஜப்பான் படங்களின் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.தமிழ், மலையாளம், தெலுங்கு & கன்னடம் என 4 மொழிகளில் ஜப்பான் திரைப்படம் வெளியாகவுள்ளது. 

நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக தயாராகும் ஜப்பான் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான லுக்கில் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமர்க்களமான ஜப்பான் பட ஃபர்ஸ்ட் லுக்போஸ்டர் இதோ…

 

Presenting the First Look of #Karthi in & as #Japan#Karthi25 #JapanFirstLook

ஜப்பான் - జపాన్ - ಜಪಾನ್ - ജപ്പാൻ pic.twitter.com/N3Y8PAsZtk

— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 14, 2022