தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்தி தனக்கே உரித்தான பாணியில் தரமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். முன்னதாக இந்த ஆண்டில்(2022) இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளிவந்த விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவராயன் வந்தியதேவன் எனும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் கார்த்தி. பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கடைசியாக இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் அட்டகாசமான இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படமும் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே இன்று(நவம்பர் 14) நடிகர் கார்த்தியின் Facebook பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம், எனது Facebook பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


 

Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.

— Karthi (@Karthi_Offl) November 14, 2022