தமிழ் திரை உலகின் தன்னிகரற்ற கதாநாயகராக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வாரிசு திரைப்படம் ரிலீஸாகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார். முன்னதாக வெளிவந்த வாரிசு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட்டாகி 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட்டாடியுள்ளது.

பாடலாசிரியர் விவேக் அவர்களின் வரிகளில் தளபதி விஜய் மற்றும் MM.மானசி இணைந்து பாடிய ரஞ்சிதமே பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் பட்டியை கிளப்பிய ரஞ்சிதமே பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.யூட்யூப் மியூசிக் குளோபல் சார்ட் பட்டியலில் இருக்கும் முதல் நூறு பாடல்களில் முதல் இடத்தைப் பெற்று வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் அசத்தலான சாதனை படைத்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#Ranjithame debuts No.1 on Top 100 Music Videos Global @YouTube 😎💥#Varisu @actorvijay @MusicThaman pic.twitter.com/lL64ETTeJY

— Vijay Fans Trends (@VijayFansTrends) November 13, 2022