தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவான்கள் பல முயற்சி செய்தும் நிறைவேறாத பொன்னியின் செல்வன் எனும் கனவை இயக்குனர் மணிரத்னம் தனது கடின உழைப்பால் நிஜமாக்கினார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று 450 கோடிக்கும மேல் வசூலித்துள்ளது.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் 2வது பாகம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து OTTயிலும் அமேசான் பிரைம் வீடியோவில் ரசிகர்கள் தொடர்ந்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பொன்னி நதி பாடலின் முழு வீடியோ பாடல் வெளிவந்துள்ளது. திரைப்படத்திலும் இடம்பெறாத  இதுவரை வெளிவராத காட்சிகள் கொண்ட பொன்னி நதி முழு வீடியோ பாடல் இதோ…