பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை கரீனா கபூர் ஹிந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து கதாநாயகியாக நடித்து பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.

முன்னதாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் நடித்து வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் ரீமேக்காக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கதாநாயகனாக நடித்திருக்கும் லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். லால் சிங் சத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

நடிகை கரீனா கபூர் கடந்த 2012ஆம் ஆண்டு முன்னணி பாலிவுட் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. இதனிடையே தற்போது மூன்றாவது முறையாக நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெளிவுபடுத்திய நடிகை கரீனா கபூர், “தான் கர்ப்பமாக இல்லை எனவும், இந்திய மக்கள் தொகைக்கு தேவையான அளவு பூர்த்தி செய்துவிட்டதாக தனது கணவர் சைப் அலி கான் தெரிவித்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
kareena kapoor clarifies about rumours on her pregnancy