தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டானா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களில் ஒன்றாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதனையடுத்து சந்திரமுகி 2-விற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தையும் இயக்குனர் P.வாசு இயக்குகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும்  சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் பூஜையுடன் தொடங்கி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு தனது நகைச்சுவை காட்சி ஒன்றை நடித்து காட்டும் ரகளையான புதிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

He has entertained &made so many of us happy with his extraordinary presence in movies. He recreates the famous scene😂😂😂guess which famous movie scene was in? #laughteristhebestmedicine @offl_Lawrence #Vadivelu @LycaProductions #fun #filmmaking #TamilCinema #comedy ❤️❤️😂😂 pic.twitter.com/agCgELukvK

— Radikaa Sarathkumar (@realradikaa) July 20, 2022