தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் பெரும் எடுத்துக்காட்டாக திகழும் லெஜண்ட் சரவணன் அவர்கள், தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்தார். இதனால் தன் மீது பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் வீசப்பட்ட போதும் தொடர்ந்து உயர்ந்து பயணித்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ் திரை உலகில் களமிறங்கிய லெஜண்ட் சரவணன், தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.முன்னதாக உல்லாசம் & விசில் ஆகிய படங்களை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தை, தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்கள் வெளியிட தி லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தின் மொசலோ மொசலு வீடியோ பாடல் தற்போது வெளியானது. துள்ளலான மொசலோ மொசலு வீடியோ பாடல் இதோ…