விறுவிறுவென நடைபெறும் கார்த்தியின் சர்தார் டப்பிங் !
By Aravind Selvam | Galatta | July 20, 2022 18:24 PM IST

கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் அடுத்து நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன்,விருமன் படங்களின் படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார்.
இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,லைலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாக கார்த்தியுடன் ஒரு வீடீயோவை இயக்குனர் பி எஸ் மித்ரன் பகிர்ந்துள்ளார்.