'50 ஆண்டுகளுக்குப் பிறகு..!'- பிரபாஸ் - அமிதாப் பச்சனின் ப்ராஜக்ட் K படத்தில் இணைவது பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை!

ப்ராஜக்ட் K படத்தில் இணைவது பற்றி உலகநாயகன் கமல்ஹாசன்,kamal haasan important statement on project k prabhas amitabh bachchan | Galatta

பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிப்பது குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன், தனது நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மீண்டும் இணைந்திருக்கும் கமல்ஹாசன் அவர்களின் இந்தியன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதில் மிகவும் குறிப்பிடப்படும் ஒரு திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் பயோபிக் திரைப்படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாக்கி வரும் இந்த ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் பிரபாஸ் தீபிகா படுகோன் திஷா பதானி உள்ளிட்ட பலர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிப்பில் உருவாகும் இந்த பிராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீப காலமாக செய்திகள் பரவி வந்த நிலையில், இன்று ஜூன் 25ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து உலகநாயகன் கமல்ஹாசன்  அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,

50 ஆண்டுகளுக்கு முன்பு நான் உதவி நடன இயக்குனராகவும், உதவி இயக்குனராகவும் இருந்த போது அஸ்வினி தத் என்பவரின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியிருந்தேன். இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறோம். அடுத்த தலைமுறையில் இருந்து வந்த ஒரு புத்திசாலி இயக்குனர் தலைமை வகிக்கிறார். என் உடன் நடிக்கும் நட்சத்திரங்களான திரு.பிரபாஸ் மற்றும் திரு.தீபிகா இருவருமே அந்த தலைமுறையை சார்ந்தவர்களே. அமிதா ஜி உடன் முன்பே பணியாற்றி இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை இணையும் போதும் முதல் முறை போன்றே உணர்கிறேன். அமிதாப் ஜி தொடர்ந்து அவரை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார் நானும் அதற்கான செயல்முறையில் தான் இருக்கிறேன். ப்ராஜக்ட் கே படத்திற்காக காத்திருக்கிறேன். எந்த நிலையாக இருந்தாலும் ரசிகர்கள் என்னை அங்கே வைத்து விடுவார்கள், நான் ஒரு சினிமா ஆர்வலர் என்பது தான் என்னுடைய முதன்மையான தரம். அந்த தரம் என்னுடைய துறையில் எப்போதும் புதிய முயற்சிகளை எடுக்கும் சமயங்களில் பாராட்டப்படும். அதில் என்னுடையதே ப்ராஜெக்ட் கே படத்திற்கான முதல் பாராட்டாக இருக்கட்டும். நம்முடைய இயக்குனர் நாக அஸ்வின் அவர்களின் இந்த பார்வை கட்டாயமாக நாடு முழுவதும் உலக சினிமா முழுவதும் அந்தப் பாராட்டை எதிரொலிக்கும். என தெரிவித்து இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் அந்த அறிக்கை இதோ…
 

Thank you for the love Amit Ji @SrBachchan

Looking forward to collaborating with #Prabhas @AshwiniDuttCh @nagashwin7 @deepikapadukone @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms #ProjectK pic.twitter.com/kb5C87HaS3

— Kamal Haasan (@ikamalhaasan) June 25, 2023

சினிமா

"பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன்.. வித்யாசம் இது தான்.." மாரி செல்வராஜ் பகிர்ந்த அட்டகாசமான தகவல் – Exclusive Interview உள்ளே..

“நான் இன்னும் நினைத்ததை பேசக்கூடிய இடத்துக்கு வரல..” உடைந்து பேசிய ‘மாமன்னன்’ இயக்குனர்  மாரி செல்வராஜ் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“நான் இன்னும் நினைத்ததை பேசக்கூடிய இடத்துக்கு வரல..” உடைந்து பேசிய ‘மாமன்னன்’ இயக்குனர் மாரி செல்வராஜ் – Exclusive Interview உள்ளே..

பிரபாஸின் பிரம்மாண்ட Pan India படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்.. – Project K படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..!
சினிமா

பிரபாஸின் பிரம்மாண்ட Pan India படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்.. – Project K படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..!