"லோகேஷ் எனக்கு மகன் மாதிரி!"- தளபதி விஜயின் அதிரடியான லியோ படம் குறித்து மனம் திறந்த சஞ்சய் தத்!

தளபதி விஜயின் லியோ படம் குறித்து மனம் திறந்த சஞ்சய் தத்,sanjay dutt opens about thalapathy vijay in leo lokesh kanagaraj | Galatta

தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ஆர்மபகட்டத்தில் மாநகரம் , கைதி என தன் பாணியில் அடுத்தடுத்த அதிரடியான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறை மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மெகா ஹிட் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனின் இணைந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. குறிப்பாக கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் இருந்து உருவான LCU என்ற யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ படமும் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜயின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த நா ரெடி பாடல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் பாடலின் வீடியோவில் இடம் பெற்றுள்ள சில விஷயங்களை குறிப்பிட்டும் லியோ திரைப்படம் LCU-வில் இடம் பெறும் என்பது போன்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. முன்னதாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த முறை மதுரையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சஞ்சய் தத் லியோ திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் "எனக்கு ஒரு மகன் மாதிரி" என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & தளபதி விஜய் அவர்களோடு நல்ல நட்புறவு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"லியோ பட 'நா ரெடி' பாடலுக்கு தளபதி விஜயின் ரியாக்ஷன் என்ன?"- முதல் முறை மனம் திறந்த விஷ்ணு எடவன்! ட்ரெண்டிங் வீடியோ

'ஜாலியா இருக்கீங்க.. இந்த உலகத்துக்குள்ள வாங்க.!' என்ற மாரி செல்வராஜ்... உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட அனுபவங்கள் இதோ!
சினிமா

'ஜாலியா இருக்கீங்க.. இந்த உலகத்துக்குள்ள வாங்க.!' என்ற மாரி செல்வராஜ்... உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட அனுபவங்கள் இதோ!

ஹரிஷ் கல்யாண் - இந்துஜா இணையும் புதிய த்ரில்லர் படம்... கவனம் ஈர்க்கும் டைட்டில் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

ஹரிஷ் கல்யாண் - இந்துஜா இணையும் புதிய த்ரில்லர் படம்... கவனம் ஈர்க்கும் டைட்டில் லுக் போஸ்டர் இதோ!